ஆத்தூர்: சித்தரேவு ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டியில் வெடி தயாரித்த போது எதிர்பாராதவிதமாக வெடி வெடித்து இருவர் படுகாயம்:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சித்திரேவு ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைப்பட்டி 7வது வார்டு பகுதியில் வசித்து வரும் சிவராமன் 22 கண்ணுசாமி 30 ஆகிய இருவரும் தனது வீட்டின் மாடியில் காட்டுப் பன்றிக்கு வெடி வைப்பதற்காக வெடி தயாரித்ததாக கூறப்படும் நிலையில் 15:9:23 மாலை 3 மணிக்கு இருவரும் வெடி தயாரித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பலத்த சத்தத்துடன் வெடி வெடித்துள்ளது இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர் பலத்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் மாடியில் சென்று பார்த்த போது இருவரும் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர் இருவரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் தொடர்பாக பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment