வேடசந்தூர் அருகே நிலத்தை உழுவதற்காக புதிதாக வாங்கிய டிராக்டரை இயக்கி பரிசோதித்த போது ரொடேட்டர் இயந்திரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 28 September 2023

வேடசந்தூர் அருகே நிலத்தை உழுவதற்காக புதிதாக வாங்கிய டிராக்டரை இயக்கி பரிசோதித்த போது ரொடேட்டர் இயந்திரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள ஆர்.பி.பள்ளபட்டி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்(29). இவர் கடந்த 3 ஆண்டுகளாக வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூர், கருதனம்பட்டி பகுதியில் நிலம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். 


இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலத்தை உழுவதற்காக புதிதாக டிராக்டர் ஒன்றை ரஞ்சித் வாங்கியுள்ளார். நேற்று வாகன பதிவு முடிந்து டிராக்டரை தனது தோட்டத்திற்கு எடுத்து வந்துள்ளார். டிராக்டரின் பின்னால் நிலத்தை உழுவதற்கு பயன்படும் ரொட்டேட்டரை இணைத்து, வயல்காட்டில் இறக்கி சோதனை செய்து கொண்டிருந்தார்.


அப்போது எதிர்பாராத விதமாக ரொட்டேட்டரில் ரஞ்சித்தின் கைலி வேஷ்டி சிக்கி இழுத்துள்ளது. இதில் ரொடேட்டர் இயந்திரத்திற்குள் ரஞ்சித்தின் உடல் சிக்கி நசுங்கியது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து டிராக்டரை நிறுத்தியுள்ளனர். அதற்குள் ரஞ்சித் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


நிலத்தை உழுவதற்காக புதிய டிராக்டரை வாங்கி இயக்கிய போது, ரொட்டேட்டரில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


- தமிழக குரல் செய்திகளுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர் வேடசந்தூர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

No comments:

Post a Comment

Post Top Ad