வேடசந்தூர் அருகே சரக்கு வாகனமும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்து, இளைஞர் படுகாயம். - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 25 September 2023

வேடசந்தூர் அருகே சரக்கு வாகனமும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்து, இளைஞர் படுகாயம்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நாடார் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் வயது 21. இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மருந்தக கடையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவருக்கு வேடசந்தூர் அருகே எரியோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை கிடைத்த நிலையில் இன்று பிரகாஷ் முதல் நாள் பணிக்கு சென்றுள்ளார்.


பணியை முடித்துவிட்டு எரியோட்டில் இருந்து வேடசந்தூர் நோக்கி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்த பொது எதிரே கம்பி வேலிகளை ஏற்றி பவித்ரன் என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் பிரகாசிற்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு இருசக்கர வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது.


இந்த சம்பவத்தின் போது அருகில் இருந்த வேடசந்தூர் தீயணைப்பு வீரர்கள் விபத்தில் காயமடைந்தவரை தனியார் வாகனம் மூலம் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பிரகாசுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். மருத்துவமனை ஊழியர்கள் 108 அலுவலகத்தை தொடர்பு கொண்டு மேல் சிகிச்சைக்காக விபத்தில் காயம் அடைந்த வரை கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் வேண்டுமென்று கேட்டதற்கு தற்பொழுது வேடசந்தூர் 108 ஆம்புலன்ஸ் செயல்பாட்டில் இல்லை என்றும் வேடசந்தூரிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள எரியோடு மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.


வேடசந்தூர் மற்றும் சீத்தமரநாலு ரோடு 108 ஆம்புலன்ஸ்கள் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் தற்போது இல்லாத காரணத்தினால் மருத்துவமனையின் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த பிரகாஷின் உறவினர்கள் இரண்டு 108 ஆம்புலன்ஸ் பின்புறம் நிற்கின்றன எதற்காக ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆகின்றது என மருத்துவ ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


அதன்பின்னர் 30 நிமிடங்களுக்குப் பிறகு எரியோட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விபத்தில் காயம் அடைந்தவரை ஆம்புலன்சில் ஏற்றி மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருந்தும் 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வருவதால் காலதாமதங்கள் ஏற்பட்டு விபத்தில் காயம் அடைந்தவரின் உடல்நிலை மோசமான நிலைமை ஏற்பட காரணமாக இருக்கிறது என்று உறவினர்கள் வேதனை தெரிவித்தனர். 


- தமிழக குரல் செய்திகளுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர் வேடசந்தூர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு. 

No comments:

Post a Comment

Post Top Ad