சனாதானத்தைப் பற்றி பொதுவெளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடன் விவாதிக்க தயாரா- புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி?
புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி திண்டுக்கல்லிற்கு வருகை புரிந்தார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விருந்தினர் மாளிகையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்:-
சனாதானத்தைப் பற்றி பொதுவெளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடன் விவாதிக்க தயாரா? அந்த விவாதத்தில் தோற்றால் பதவி விலக தயாரா?
என புதிய தமிழகம் கட்சி நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தமிழகத்தில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் இந்துக்களை விரட்டியடிப்பதே தங்களது நோக்கமாக கொண்டுள்ளனர் என டாக்டர்.கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார். உடன் நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment