திண்டுக்கல் அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் படுகாயம் இரயில்வே போலீசார் விசாரணை
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்புராசு(45). இவர் மது போதையில் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது இரயிலில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்.
படுகாயம் அடைந்த சுப்புராசுவை ரயில்வே போலீசார் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் இரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment