நத்தம் அருகே தென்னந்தோப்பில் பிடிபட்ட மலைப்பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ளது குட்டுப்பட்டி-புதூர். இங்கு வெள்ளைச்சாமி என்பவரது தோட்டத்தில் திடீரென புகுந்தது 7 அடி நீளமுள்ள ஒரு மலைப்பாம்பு.இந்நிலையில் பாம்பை பிடித்து செல்ல தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புதுறையினரால் லாவகமாக அந்த மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து அந்த மலைப்பாம்பு தீயணைப்பு துறையினரால் வனப்பகுதியில் விடப்பட்டது.
மழை பொழியும் காலங்களில் இது போன்று பாம்புகள் வெளியே வரத் தொடங்குகின்றன. முன்பெல்லாம் இவற்றை அடித்து கொன்று விடும் பழக்கம் காணப்பட்டது. ஆனால் தற்போது வனவிலங்குகளை துன்புறுத்தாது,வனத் துறையினரிடம் தகவல் தெரிவித்து அவற்றின் வாழும் உரிமையை காக்கும் விழிப்புணர்வு மக்களிடையே வளர்ந்து வருவது பாராட்டுக்குரியது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment