திண்டுக்கல் குடைபாறைப்பட்டியில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் இந்துமுன்னணி யினர் மற்றும் பெண்கள் உட்பட 40 பேர் கைது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 18 September 2023

திண்டுக்கல் குடைபாறைப்பட்டியில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் இந்துமுன்னணி யினர் மற்றும் பெண்கள் உட்பட 40 பேர் கைது


திண்டுக்கல் குடைபாறைப்பட்டியில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் இந்துமுன்னணி யினர் மற்றும்  பெண்கள் உட்பட 40  பேர் கைது



திண்டுக்கல் குடைபாறைப்பட்டியில் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய  காவல்துறையினர் அனுமதி மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இந்துமுன்னணி சார்பில் தடையை மீறி காளியம்மன் கோவிலில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்பொழுது தடையை மீறி சிலையை பிரதிஷ்டை செய்ததாக கூறி காவல்துறையினர் சிலையை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். மேலும் இந்துமுன்னணி யினர் மற்றும்  பெண்கள் உட்பட 40  பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் சிலையை எடுத்துச் சென்று கோட்டை குளத்தில் கரைத்தனர். 



திண்டுக்கல் நகர் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.




தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad