திண்டுக்கல் கோபாலசமுத்திரம் 108 விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு அலங்காரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் கோபாலசமுத்திரக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு நன்மை தரும் 108 விநாயகர் திருக்கோயிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்த திருக்கோவிலில் உள்ள பிரம்மாண்டமான 32 அடி உயர ஒரே கல்லில் ஆன விநாயகரை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி மருதநாயகம் செய்து வருகிறார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment