மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்- 200க்கும் மேற்பட்டோர் கைது. - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 7 September 2023

மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்- 200க்கும் மேற்பட்டோர் கைது.


மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்- 200க்கும் மேற்பட்டோர் கைது.


விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, அதிகரித்து வரும் வேலையின்மை கொடுமை, பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசின் செயலை கண்டித்து திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக திண்டுக்கல் நாகல் நகரிலிருந்து ஊர்வலமாக கிளம்பி பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்திற்கு வருகை தந்தனர். அப்பொழுது காவல் துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி இருந்தனர். ஆனால் தடுப்புகளை தாண்டி ரயில் நிலையத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைய முற்பட்டனர். அப்பொழுது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ரயில் நிலையத்தின் உள்ளே சென்று ரயில் இஞ்சின் முன்பு தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இந்த போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்

மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad