திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகளுடன் காய்ச்சலுக்கு என தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது
பழனி பகுதியில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் காய்ச்சல், சளி உள்ளிட்ட தொற்று நோய்களால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பழனி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல், சளி தொற்றுக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதையொட்டி ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு என தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு ஆண்கள் வார்டில் கொசு வலையுடன் கூடிய 10 படுக்கைகளும், பெண்கள் வார்டில் 10 படுக்கைகளும் என மொத்தம் 20 படுக்கைகள் போடப்பட்டு உள்ளன.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment