திண்டுக்கல் மாவட்டத்தில் இணையவழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.2 லட்சம் பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடைச் சேர்ந்த ஆனந்தி (45) என்பவரிடம் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.20 இலட்சம் கடன் வாங்கி தருவதாக கூறி ஆதார் கார்டு, பான் கார்டு, மற்றும் வங்கி விபரங்களை பெற்றுக்கொண்டு ரூ.2 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக, திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் வழிகாட்டுதலின் படியும், சைபர் கிரைம் ஏடிஎஸ்பி சந்திரன் மேற்பார்வையில், சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் மீனா மற்றும் சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து ரூ.2 லட்சம் பணத்தை மீட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், பணத்தை ஆனந்தியிடம் ஒப்படைத்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment