பராமரிப்பு பணி பழனியில் ஒரு நாள் ரோப் கார் ரத்து
திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலில் நாளை மறுநாள் (27.07.2023) ரோப் கார் சேவை இயங்காது.
திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ் பெற்ற முருகனின் படைவீடான பழனி முருகன் கோவிலில் மின் இழுவை ரயிலுடன் ரோப் கார் வசதியும் பக்தர்கள் மற்றும் முதியோர் எளிதில் மலைக்கோவிலுக்கு சென்று வர வசதியாக செய்யப்பட்டு இயங்கி வரும் நிலையில்...
பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் வியாழன் (27.7.2023) அன்று ஒரு நாள் மட்டும் ரோப் கார் சேவை ரத்து செய்யப்படுவதாகவும், அன்று ரோப் கார் இயங்காது எனவும் பழனி மலைக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment