திண்டுக்கல் அருகே விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பாதிப்பு
திண்டுக்கல் பொன்மாந்துரை புதுப்பட்டியில் உள்ள தோல் தொழிற்சாலையில் இருந்த தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சல்பைடு என்னும் விஷவாயு தாக்கி மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஹசன்(34), சுமன்(35), ராஜபாளையத்தை சேர்ந்த ரங்கநாதன் (35) ஆகிய 3 தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்து ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment