நத்தம் அருகே மின்சாரம் தாக்கி 2 பசு மாடுகள் உயிரிழப்பு
திண்டுக்கல், நத்தம் அருகே அய்யாபட்டியை சேர்ந்த பெரியகருப்பன்(50) இவர் தோட்டத்தில் 2 பசு மாடுகளையும் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராத விதமாக மிதித்ததில் 2 பசுமாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து தகவல் அறிந்து நத்தம் கிராம நிர்வாக அலுவலர் சுப்புலெட்சுமி மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment