கொடைக்கானல் குடியிருப்பு பகுதிகளில் உலாவந்த காட்டுமாடுகள்:
திண்டுக்கல் மாவட்ட சுற்றுலா தலங்களில் முக்கியமான ஒரு இடத்தை பிடித்துள்ளது கொடைக்கானல், கொடைக்கானல் வனப்பகுதிகளில் இருந்து அவ்வப்போது இரை தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு உலாவரும் காட்டு மாடுகளை கண்டு குடியிருப்பு வாசிகள் அச்சப்பட்டு அவர்களின் வீடுகளில் தஞ்சம் அடைகின்றனர் அதேபோல இன்று திடீரென்று வனப்பகுதியில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் கொடைக்கானல் பூம்பாறை பகுதி குடியிருப்புகளுக்கு உலா வந்தன சிறிது நேரம் கழித்தபிறகு மீண்டும் காட்டு மாடுகள் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment