திண்டுக்கல் மேற்கு முள்ளிப்பாடி பிரிவு அருகே நடந்து சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து :
திண்டுக்கல் கொத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் கோவிந்தராஜ் 47 என்பவர் முள்ளிப்பாடி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முள்ளிப்பாடி பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி மகன் அருள் 37 என்பவர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக அஜாக்கிரதையாக ஹாரன் அடிக்காமலும் வந்து நடந்து சென்று கொண்டிருந்த கோவிந்தராஜ் மீது மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார் இது குறித்து தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கோவிந்தராஜனை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் இது குறித்து தாலுகா காவல்நிலையஆய்வாளர் சந்தனமோகன் சார்புஆய்வாளர் பாலசுப்பிரமணி மற்றும் காவலர்கள் அருள் மீது வழக்கு பதிந்து தீவிர விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன்.
No comments:
Post a Comment