திண்டுக்கல் வடக்கு ரத வீதியில் உள்ள தனியார் விடுதியில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு
போலீஸ் விசாரணை: திண்டுக்கல் வடக்கு ரத வீதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கடந்த புதன்கிழமை 26:7:23 காலை வாடகைக்கு அறை எடுத்து தங்கிய நபர் இன்று வெள்ளிக்கிழமை28:7:23 வரை அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த தனியார் விடுதியின் உரிமையாளர் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார் விரைந்து வந்த நகர் வடக்கு காவல் நிலைய போலீஸ் அதிகாரிகள் அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மர்மமான முறையில் ஒரு ஆண் நபர் இறந்து கிடந்துள்ளார் அவர் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இறந்து கிடந்த நபர் திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சல்மான்கான் 35 என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இது கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்:
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகாசெய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment