வடமதுரை அருகே போலீசாருக்கு போக்கு காட்டிய சூதாட்ட கும்பல் தலைவன் கைது - வேடசந்தூர் டிஎஸ்பி நடவடிக்கை.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை கொம்பேறிபட்டி, புத்தூர், பூசாரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரவு நேர சூதாட்டம் நடைபெறுகிறது. இந்த சூதாட்டத்தில் வெளியூர்களை சேர்ந்த நபர்களும் சொகுசு காரில் வந்து விளையாடி தங்கள் பணம் மற்றும் நகைகளை இழந்து வந்தனர். மேலும் சூதாட்ட தகராறில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது எனவும் மேலும்
கொம்பேறிபட்டி பள்ளிக்கூடம் பின்புறம் சூதாட்டம் நடைபெறுவதாக வேடசந்தூர் டிஎஸ்பி துர்காதேவிக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில்,
போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது ராசு(30), வெங்கடேஷ்(45), சேகர்(43) ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். போலீசார் வருவதை அறிந்ததும் சேகர் மற்றும் வெங்கடேஷ் தப்பிஓடி விட்டனர். சூதாட்ட கும்பல் தலைவனாக இருந்த ராசு என்பவரை வடமதுரை போலீசார் கைது செய்து வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment