மணிப்பூர் கலவரத்தை கண்டித்து திண்டுக்கல்லில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது இரு சமூகத்தினர் இடையே கலவரமாக உருவெடுத்து 50 நாட்களை கடந்துவிட்டது. சுமார் 120 பேர் இந்த கலவரத்தில் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த படுகொலையை தடுக்காத மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு பகுதி செயலாளர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார். மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மச்சக்காளை, அம்சவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், மாமன்ற உறுப்பினர் பாரதி,
மாநகர மாவட்ட துணை தலைவர்கள் அப்துல் ரகுமான், அபீபுல்லா, பகுதி செயலாளர்கள் உதயகுமார், நாகலட்சுமி, பரமசிவம், கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் சுமதி, மாநகர மாவட்ட தலைவர் ரோஜா பேகம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது அலியார், மாணவர் காங்கிரஸ் தலைவர் அமீர் அம்ஜா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment