நிலக்கோட்டை:கொடை ரோடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர்கள் கைது
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கொடை ரோடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் நிலக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் முருகன் தலைமையிலான காவலர்கள் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சந்திரசேகர்(52) முகமது சம்சு உசேன் (62) சூரிய பிரகாஷ் (25) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 630 லாட்டரி சீட்டுகள் மற்றும் ₹13500 பணத்தையும் பறிமுதல் செய்து அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மூவரையும் சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment