திண்டுக்கல்லில் நடைபெற்ற மீன்பிடி திருவிழா... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 6 July 2023

திண்டுக்கல்லில் நடைபெற்ற மீன்பிடி திருவிழா...

 


திண்டுக்கல்லில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் பல வகையான மீன்கள் சிக்கின- பொதுமக்கள் மகிழ்ச்சி.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் மடூர் ஊராட்சியில் புகையிலைப்பட்டி உள்ளது. இங்குள்ள பெரிய குளத்தில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்ததால் பெரியகுளம் நிரம்பியது. விவசாயத்திற்கு பெரியகுளம் நீரை பயன்படுத்தியதால் நீர் வற்றியது. இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் மீன் பிடிக்க முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து இன்று ஊர் நாட்டாமை சூசைமாணிக்கம், மணியக்காரர் சின்னப்பன், கோவில் பிள்ளை சின்னப்பன், ஊர் நிர்வாகிகள் காமராஜ், சரவணன் மற்றும் பொதுமக்கள் பெரிய குளத்தில் அருகே உள்ள கன்னிமார் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர். அதன் பின்னர் வான வேடிக்கையுடன் பெரியகுளத்திற்கு ஊர்வலமாக வந்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர். இந்த மீன்பிடி திருவிழாவில் ராஜக்காபட்டி, மணியக்காரன்பட்டி, பெரியகோட்டை மற்றும் திருச்சி, மணப்பாறை, மதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள  கிராமங்களில் இருந்து வருகை தந்தவர்கள் மீன் பிடித்தனர். சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு ஊத்தா கூடை, கச்சாவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு ஒற்றுமையாக பெரியகுளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, ஜிலேபி, விரால், தேளிவிரா, கெளுத்தி, கெண்டை மீன்கள் கிடைத்தன. கிடைத்த மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad