வேடசந்தூரில் 35 ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வேண்டியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது பொய் வழக்கு போட்டதாக கூறி காவல்துறையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் எம்ஜிஆர் நகர் உள்ளது. இந்த நகர் வண்டிப்பாதையில் 35 ஆண்டுகளாக 32 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி விட்டலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் தனது இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது எம்ஜிஆர் நகரை சேர்ந்த மக்களும் முருகேசனுக்கும் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நெல்சன் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் பாண்டி ஆகியோர் முருகேசனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி அவர்களை தாக்கிய வழக்கில் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த மூன்று பேர் கைதான நிலையில் இவ்வழக்கில் நாகவேல் என்பவர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறியும், எம்ஜிஆர் நகரில் வண்டிப்பாதை பொறம்போக்கில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக 32 குடும்பங்கள் வசித்து வருகின்ற நிலையில் அவர்களுக்கு உடனே வீட்டுமனை பட்டா வழங்கிடுக என்றும், கோஷங்கள் எழுப்பியவாறு அம்பேத்கர் சிலையிலிருந்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்றனர்.
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்வதற்கு சென்ற பொழுது காவல் நிலையம் முன்பு காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியவாறு காவல் நிலையம் முன்பே 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்பு வருவாய்த்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி கூட்டம் நடத்தி விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறியதால்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் இருந்து கலைந்து சென்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக வேடசந்தூர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment