குழந்தை கடத்தல் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் நத்தம் சாலை, பென்னகரம் பகுதியில் உள்ள அருள் ஜோதி வள்ளலார் மேல்நிலைப் பள்ளியில் அமைதி அறக்கட்டளை சார்பில் குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை, குழந்தை தொழிலாளர் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் கங்காதரன், தமிழ் ஆசிரியர் திண்டுக்கல் சுரதா, கூட்டுறவு வளர்ச்சி அலுவலர் மற்றும் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கள ஒருங்கிணைப்பாளர்கள் மருதைகலாம், சுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment