திண்டுக்கல் சிலுவத்துார் நெடுஞ்சாலை மேம்பால பணிகள் முடிவடையாமலே திறக்கப்பட்டு பயண போக்குவரத்தில் இருந்த பாலம் நேற்று மீண்டும் மூடப்பட்டதால் பொதுமக்கள் கொதிப்படைந்தனர்.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் மேம்பால கட்டுமான பணியானது தொடர்ந்து 9 ஆண்டுகள் நடந்தபோது பொதுமக்களான நமக்கான பணிதான் என்ற சகிப்பு தன்மையில் பொறுத்து கொண்டனர். இந்நிலையில் தற்போது சிறு பிரச்னைகளை காரணம் காட்டி மேம்பால பணி முடிந்த நிலையிலும் பயணத்தை தடுப்பது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. இதனால்
மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்படுகிறது. மேம்பால பணி துவங்கும்போதே திட்டமிடல் சரியாக இல்லாததால் வந்த பிரச்னை இது. இதனால் வெகுவிரைவில் மக்கள் போராட்டம் பெரியதாக உருவெடுக்கும் நிலை உள்ளது. அதற்குள் பிரச்னையை முடித்து விரைவில் மேம்பாலத்தை முறைப்படி திறந்து வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment