ஆயிரம் ரூபாய் வழங்குவதில் தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்- திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலக்கிருஷ்ணன் பேட்டி.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் கே.பாலக்கிருஷ்ணன் பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில்:-
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணம் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தாது. தேர்தல் நேரத்தில் மகளிர் உரிமை தொகை ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, தற்போது நிபந்தனைகள் விதிப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும். சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் பெரியசாமி சமூக விரோதிகளால் தாக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேட்டியளித்தார். உடன் மாவட்ட நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....
No comments:
Post a Comment