திண்டுக்கல் அருகே மாணவர்களுக்கு படைப்பாற்றல் திறன் வளர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே மறவபட்டி குழந்தை இயேசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு படைப்பாற்றல் திறன் வளர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூலை திறன், கைவினைப் பொருட்கள் உருவாக்குதல், வீணாகும் பொருட்களைக் கொண்டு கைவினைப் பொருட்களாக உருவாக்குதல், கதை சொல்லல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் பள்ளி தாளாளர் அந்தோணிசாமி, பங்குத்தந்தை பிலிப்ஸ் சுதாகர், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment