திண்டுக்கல் மாவட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விண்ணப்பப் பதிவு தன்னார்வலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் - மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி ஆலோசனைகள் வழங்கினார். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், விண்ணப்பப் பதிவு தன்னார்வலர்களுக்கான திண்டுக்கல் மேற்கு வட்டம் அளவிலான பயிற்சிக் கூட்டம் திண்டுக்கல் பிச்சாண்டி மஹாலில் நடைபெற்றது. இப்பயிற்சிக் கூட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், பயனாளிகளை தேர்வு செய்வதற்காக நியாயவிலைக்கடைகள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள், தகுதிகள், தேவையான ஆவணங்கள் ஆகியவற்றை அறிந்து, விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து குறிப்பிட்ட நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள விண்ணப்பப் பதிவு தன்னார்வலர்களாக, இல்லம் தேடி கல்வித்திட்ட பணியாளர்கள், சுயஉதவிக்குழு தன்னார்வலர்கள், இ-சேவை மைய பொறுப்பாளர்கள் தன்னார்வலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பணிகள், பதிவேற்றம் செய்யும் முறைகள், ஆவணங்கள் பதிவேற்றம், தொழில்நுட்ப பயிற்சிகள் வட்ட அளவில் வழங்கப்பட்டு வருகிறது. பயோமெட்ரிக் சிஸ்டம், விண்ணப்பதாரர்களின் பதிவுகளை பதிவேற்றம் செய்வது குறித்து பணியாளர்கள் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளையும், தொழில்நுட்பங்களையும் நன்கு அறிந்துகொள்ளுங்கள். சந்தேகங்கள் ஏதேனும் ஏற்பட்டால் இந்த பயிற்சி கூட்டத்தில் மாஸ்டர் பயிற்சியாளர்களிடம் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள். முகாமில் பணி நேரத்தில் ஏதேனும் சந்தேகங்கள், தொழில்நுட்பக் கோளாறுகள், கூட்ட நெரிசல் ஏற்பட்டால் உடனடியாக வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை அல்லது மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். தகவல் அறிந்தவுடன் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வர். முகாம் நடைபெறும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, டோக்கன் முறையில் குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பங்கள் பதிவேற்றும் முகாமிற்கு வரவழைக்கப்படுவர். அவ்வாறு வரும் பொதுமக்களிடம் கனிவுடன், அன்புடன் நடந்துகொள்ள வேண்டும். பணியாளர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே முகாம் நடைபெறும் இடங்களில் இருக்க வேண்டும். விண்ணப்பங்களில் உள்ள விபரங்களை பதிவேற்றம் செய்வது மட்டுமே தங்கள் பணி, அதை முழு ஈடுபாட்டுடன் செய்திட வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்பது தமிழ்நாடு முதலமைச்சரின் உன்னதமான திட்டம். இதை மக்களிடம் கொண்டு சேர்த்து, திட்டம் வெற்றியடைச் செய்வது என்பது பணியார்கள் செயல்பாட்டில் தான் உள்ளது. எனவே, விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும்போது, ஒவ்வொரு மக்களும் வேறுவேறு மனநிலையில் இருப்பார்கள், அவர்களை புரிந்துகொண்டு, சூழ்நிலைகளை அறிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இன்றையதினம், மாவட்டம் முழுவதும் அனைத்து வருவாய் வட்டங்களிலும் இந்த பயிற்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சுமார் 2,000 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மகாலிங்கம் நாடார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திண்டுக்கல் கிழக்கு வட்டம் அளவிலான பயிற்சிக் கூட்டம் மற்றும் நத்தம் வட்டம் அளவில் நத்தம் எம்எம்ஏ திருமண மஹாலில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், விண்ணப்பப் பதிவு தன்னார்வலர்களுக்கான பயிற்சிக் கூட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். இப்பயிற்சிக் கூட்டத்தில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவி இயக்குநர் பிரபாவதி, துணை இயக்குநர் (நகர் மற்றும் ஊரக அமைப்பு) ரமேஸ்குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 13 July 2023

திண்டுக்கல் மாவட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விண்ணப்பப் பதிவு தன்னார்வலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் - மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி ஆலோசனைகள் வழங்கினார். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், விண்ணப்பப் பதிவு தன்னார்வலர்களுக்கான திண்டுக்கல் மேற்கு வட்டம் அளவிலான பயிற்சிக் கூட்டம் திண்டுக்கல் பிச்சாண்டி மஹாலில் நடைபெற்றது. இப்பயிற்சிக் கூட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், பயனாளிகளை தேர்வு செய்வதற்காக நியாயவிலைக்கடைகள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள், தகுதிகள், தேவையான ஆவணங்கள் ஆகியவற்றை அறிந்து, விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து குறிப்பிட்ட நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள விண்ணப்பப் பதிவு தன்னார்வலர்களாக, இல்லம் தேடி கல்வித்திட்ட பணியாளர்கள், சுயஉதவிக்குழு தன்னார்வலர்கள், இ-சேவை மைய பொறுப்பாளர்கள் தன்னார்வலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பணிகள், பதிவேற்றம் செய்யும் முறைகள், ஆவணங்கள் பதிவேற்றம், தொழில்நுட்ப பயிற்சிகள் வட்ட அளவில் வழங்கப்பட்டு வருகிறது. பயோமெட்ரிக் சிஸ்டம், விண்ணப்பதாரர்களின் பதிவுகளை பதிவேற்றம் செய்வது குறித்து பணியாளர்கள் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளையும், தொழில்நுட்பங்களையும் நன்கு அறிந்துகொள்ளுங்கள். சந்தேகங்கள் ஏதேனும் ஏற்பட்டால் இந்த பயிற்சி கூட்டத்தில் மாஸ்டர் பயிற்சியாளர்களிடம் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள். முகாமில் பணி நேரத்தில் ஏதேனும் சந்தேகங்கள், தொழில்நுட்பக் கோளாறுகள், கூட்ட நெரிசல் ஏற்பட்டால் உடனடியாக வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை அல்லது மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். தகவல் அறிந்தவுடன் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வர். முகாம் நடைபெறும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, டோக்கன் முறையில் குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பங்கள் பதிவேற்றும் முகாமிற்கு வரவழைக்கப்படுவர். அவ்வாறு வரும் பொதுமக்களிடம் கனிவுடன், அன்புடன் நடந்துகொள்ள வேண்டும். பணியாளர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே முகாம் நடைபெறும் இடங்களில் இருக்க வேண்டும். விண்ணப்பங்களில் உள்ள விபரங்களை பதிவேற்றம் செய்வது மட்டுமே தங்கள் பணி, அதை முழு ஈடுபாட்டுடன் செய்திட வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்பது தமிழ்நாடு முதலமைச்சரின் உன்னதமான திட்டம். இதை மக்களிடம் கொண்டு சேர்த்து, திட்டம் வெற்றியடைச் செய்வது என்பது பணியார்கள் செயல்பாட்டில் தான் உள்ளது. எனவே, விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும்போது, ஒவ்வொரு மக்களும் வேறுவேறு மனநிலையில் இருப்பார்கள், அவர்களை புரிந்துகொண்டு, சூழ்நிலைகளை அறிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இன்றையதினம், மாவட்டம் முழுவதும் அனைத்து வருவாய் வட்டங்களிலும் இந்த பயிற்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சுமார் 2,000 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மகாலிங்கம் நாடார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திண்டுக்கல் கிழக்கு வட்டம் அளவிலான பயிற்சிக் கூட்டம் மற்றும் நத்தம் வட்டம் அளவில் நத்தம் எம்எம்ஏ திருமண மஹாலில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், விண்ணப்பப் பதிவு தன்னார்வலர்களுக்கான பயிற்சிக் கூட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். இப்பயிற்சிக் கூட்டத்தில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவி இயக்குநர் பிரபாவதி, துணை இயக்குநர் (நகர் மற்றும் ஊரக அமைப்பு) ரமேஸ்குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


திண்டுக்கல் மாவட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விண்ணப்பப் பதிவு தன்னார்வலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் - மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி  ஆலோசனைகள் வழங்கினார்.


கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், விண்ணப்பப் பதிவு தன்னார்வலர்களுக்கான திண்டுக்கல் மேற்கு வட்டம் அளவிலான பயிற்சிக் கூட்டம் திண்டுக்கல் பிச்சாண்டி மஹாலில் நடைபெற்றது.

இப்பயிற்சிக் கூட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர்  பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், பயனாளிகளை தேர்வு செய்வதற்காக நியாயவிலைக்கடைகள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள், தகுதிகள், தேவையான ஆவணங்கள் ஆகியவற்றை அறிந்து, விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து குறிப்பிட்ட நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள விண்ணப்பப் பதிவு தன்னார்வலர்களாக, இல்லம் தேடி கல்வித்திட்ட பணியாளர்கள், சுயஉதவிக்குழு தன்னார்வலர்கள், இ-சேவை மைய பொறுப்பாளர்கள் தன்னார்வலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பணிகள், பதிவேற்றம் செய்யும் முறைகள், ஆவணங்கள் பதிவேற்றம், தொழில்நுட்ப பயிற்சிகள் வட்ட அளவில் வழங்கப்பட்டு வருகிறது. பயோமெட்ரிக் சிஸ்டம், விண்ணப்பதாரர்களின் பதிவுகளை பதிவேற்றம் செய்வது குறித்து பணியாளர்கள் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளையும், தொழில்நுட்பங்களையும் நன்கு அறிந்துகொள்ளுங்கள். சந்தேகங்கள் ஏதேனும் ஏற்பட்டால் இந்த பயிற்சி கூட்டத்தில் மாஸ்டர் பயிற்சியாளர்களிடம் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள். 

முகாமில் பணி நேரத்தில் ஏதேனும் சந்தேகங்கள், தொழில்நுட்பக் கோளாறுகள், கூட்ட நெரிசல் ஏற்பட்டால் உடனடியாக வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை அல்லது மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். தகவல் அறிந்தவுடன் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வர். முகாம் நடைபெறும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, டோக்கன் முறையில் குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பங்கள் பதிவேற்றும் முகாமிற்கு வரவழைக்கப்படுவர். அவ்வாறு வரும் பொதுமக்களிடம் கனிவுடன், அன்புடன் நடந்துகொள்ள வேண்டும். பணியாளர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே முகாம் நடைபெறும் இடங்களில் இருக்க வேண்டும். விண்ணப்பங்களில் உள்ள விபரங்களை பதிவேற்றம் செய்வது மட்டுமே தங்கள்  பணி, அதை முழு ஈடுபாட்டுடன் செய்திட வேண்டும்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்பது  தமிழ்நாடு முதலமைச்சரின்  உன்னதமான திட்டம். இதை மக்களிடம் கொண்டு சேர்த்து, திட்டம் வெற்றியடைச் செய்வது என்பது பணியார்கள் செயல்பாட்டில் தான் உள்ளது. எனவே, விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும்போது, ஒவ்வொரு மக்களும் வேறுவேறு மனநிலையில் இருப்பார்கள், அவர்களை புரிந்துகொண்டு, சூழ்நிலைகளை அறிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இன்றையதினம், மாவட்டம் முழுவதும் அனைத்து வருவாய் வட்டங்களிலும் இந்த பயிற்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சுமார் 2,000 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மகாலிங்கம் நாடார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திண்டுக்கல் கிழக்கு வட்டம் அளவிலான பயிற்சிக் கூட்டம் மற்றும் நத்தம் வட்டம் அளவில் நத்தம் எம்எம்ஏ திருமண மஹாலில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், விண்ணப்பப் பதிவு தன்னார்வலர்களுக்கான பயிற்சிக் கூட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.

இப்பயிற்சிக் கூட்டத்தில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவி இயக்குநர் பிரபாவதி, துணை இயக்குநர் (நகர் மற்றும் ஊரக அமைப்பு) ரமேஸ்குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad