ஊழலற்ற இந்தியா மாசு இல்லாத இந்தியா உருவாக்க வேண்டும் என்று வடமாநில இளைஞர் கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை விழிப்புணர்வு நடை பயணம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 12 July 2023

ஊழலற்ற இந்தியா மாசு இல்லாத இந்தியா உருவாக்க வேண்டும் என்று வடமாநில இளைஞர் கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை விழிப்புணர்வு நடை பயணம்


ஊழலற்ற இந்தியா மாசு இல்லாத இந்தியா உருவாக்க வேண்டும் என்று வடமாநில இளைஞர் கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை விழிப்புணர்வு நடை பயணம்


மத்திய பிரதேசம் குணா மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயது திலீப் யாதவ் விவசாயி.


இவர் ஊழலற்ற இந்தியா மாசிலாத இந்தியா என உருவாக்க வேண்டும் என்று கடந்த 18 நாட்களுக்கு முன்பு கன்னியாகுமாரியில் இருந்து காஷ்மீருக்கு செல்லும் பயணத்தை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று இவர் வேடசந்தூரிலிருந்து கரூர் செல்வதற்காக அழகாபுரி வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அவரிடம் கேட்ட பொழுது.

நான் ஊழலற்ற இந்தியா மாசு இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்காக விழிப்புணர்வு நடை பயணம் மேற்கொள்கிறேன்.

இப்பயணத்தின் இடையே ஒவ்வொரு கிராமங்களிலும் நகர் பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு ஊழலற்ற இந்தியா மாசில்லாத இந்தியா உருவாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன்.

நான் தினமும் காலையிலிருந்து இரவு வரை சுமார் 25 கிலோ மீட்டர் முதல் முப்பது கிலோ மீட்டர் வரை நடைபயணமாக செல்கிறார்.

பின்னர் நடைப்பயணத்தின் போது சாப்பிடுவதற்கு உணவகத்திற்கு செல்வதாகவும் நான் எதற்காக இந்த பயணம் செய்கிறேன் என்று கூறியதும் தமிழ் மக்கள் எனக்கு உணவு மற்றும் பணம் கொடுத்து நன்கு உதவுகிறார்கள் என்றும் இரவு நேரங்களில் சிலர் எனக்கு தங்குவதற்கு இடம் கொடுத்து உதவியுள்ளார்கள் என்றும் தமிழ் மக்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன் என்றும் திலீப் யாதவ் நன்றி தெரிவித்தார்.

மேலும் நான் இன்று இரவுக்குள் கருரை சென்று அடைந்து விடுவேன் என்றும் இந்த விழிப்புணர்வு நடை பயணமானது 120 நாட்களில் நிறைவு பெறும் என்றும் தெரிவித்தார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக வேடசந்தூர் செய்தியாளர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad