வேடசந்தூர் ஆத்துமேடு ஒட்டன்சத்திரம் ரோட்டில் உள்ளது வாய்க்கால்கரை. இங்கு மதுரைவீரன் கோவில் திருவிழா சுவாமி ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அப்பொழுது அங்கு வேடசந்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் பாலமுருகன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது ஆத்துமேடு டாஸ்மார்க் கடை முன்பாக இரண்டு சரக்கு வாகனத்தை ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி இருந்தனர். இதனை பார்த்த பாலமுருகன் வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தம்மனம்பட்டியை சேர்ந்த ராஜபாண்டி (30), காசநகரை சேர்ந்த குமரேசன் (32). அண்ணா நகரைச் சேர்ந்த மாரிமுத்து (30). குங்கும காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வடிவேல் (35). அய்யனார் நகரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (40) ஆகியோர் போலீஸ் என்றும் பாராமல் பட்டாசை கொளுத்தி போலீஸ்காரர் பாலமுருகன் மீது வீசினர் இதில் அவர் காலில் வெடித்த பட்டாசு அவரது செருப்பை பிய்த்து எறிந்ததுடன் காலில் காயம் ஏற்பட்டது. அப்பொழுதும் ஆத்திரம் அடங்காத நான்கு பேரும் அசிங்கமான வார்த்தைகளால் பேசியும் கையால் கடுமையாக தாக்கி ஊமை காயத்தை ஏற்படுத்தியும் போலீஸ்காரரின் செல்போனை பிடுங்கி ரோட்டில் போட்டு உடைத்ததனர். நீ போலீஸ்காரனாக இருந்தால் எங்களுக்கு என்ன பயமா. வண்டியை விட்டு ஏற்றி உன்னை கொன்று விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயம் அடைந்த முதல் நிலை காவலரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிந்து குமரேசன், காட்டுபூச்சி, வெள்ளைச்சாமி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி ராஜபாண்டி, வடிவேல் ஆகிய இருவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக வேடசந்தூர் செய்தியாளர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment