மக்கள் தொடர்பு முகாமில் 526 பயனாளிகளுக்கு ரூ.72.56 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வழங்கினார்... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 12 July 2023

மக்கள் தொடர்பு முகாமில் 526 பயனாளிகளுக்கு ரூ.72.56 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வழங்கினார்...


மக்கள் தொடர்பு முகாமில் 526 பயனாளிகளுக்கு ரூ.72.56 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வழங்கினார்.


திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் வட்டம், அய்யம்பாளையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில், வருவாய்த்துறை சார்பில் 31 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா, 38 பயனாளிகளுக்கு முழுப்புலம்  பட்டா மாறுதல், 33 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, 19 பயனாளிகளுக்கு விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, ஒரு பயனாளிக்கு கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதிய ஆணை, 8 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை, 21 பயனாளிகளுக்கு ரூ.4.72 இலட்சம் மதிப்பிலான இயற்கை மரணம் நிவாரண உதவித்தொகை, 2 பயனாளிகளுக்கு முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை, கூட்டுறவுத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி கடனுதவி, 26 பயனாளிகளுக்கு ரூ.33.38 இலட்சம் மதிப்பிலான மகளிர் சுய உதவிக்குழுக் கடனுதவி, வேளாண்துறை சார்பில் 302 பயனாளிகளுக்கு ரூ.43,000 மதிப்பிலான தென்னை மரக்கன்றுகள் மற்றும் வேளாண் இடுபொருட்கள், தோட்டக்கலைத்துறை 4 பயனாளிகளுக்கு ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் சிப்பம் கட்டும் அறை, சமூக நலத்துறை சார்பில் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 18 பயனாளிகளுக்கு ரூ.4.50 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், முத்துலெட்சமி மகப்பேறு திட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ.1.80 இலட்சம் மதிப்பிலும், மகளிர் திட்டத்தில் 5 மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு ரூ.12.31 இலட்சம் மதிப்பிலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 6 பயனாளிகளுக்க ரூ.5.74 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் 526 பயனாளிகளுக்கு ரூ.72.56 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இம்முகாமில், மாவட்ட ஊராட்சித்தலைவர் பாஸ்கரன், ஆத்துார் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி முருகேசன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் கமலக்கண்ணன், அய்யம்பாளையம் பேரூராட்சித் தலைவர்  ரேகா, வேளாண்மை இணை இயக்குநர்  அனுசுயா, துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை)  பெருமாள்சாமி, மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத்திட்டம்) கங்கா தேவி, மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சிவக்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்  பூங்கொடி, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கமலக்கண்ணன், தாட்கோ பொதுமேலாளர் தாமரைமணவாளன், ஆத்துார் வட்டாட்சியர் வடிவேல் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad