வேடசந்தூர் அருகே காளியம்மன், மாரியம்மன், முத்தாலம்மன் கோவில் உற்சவ விழாவை முன்னிட்டு 60 அடி உயர கழுமரம் ஏறும் போட்டி - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 12 July 2023

வேடசந்தூர் அருகே காளியம்மன், மாரியம்மன், முத்தாலம்மன் கோவில் உற்சவ விழாவை முன்னிட்டு 60 அடி உயர கழுமரம் ஏறும் போட்டி


வேடசந்தூர் அருகே காளியம்மன், மாரியம்மன், முத்தாலம்மன் கோவில் உற்சவ விழாவை முன்னிட்டு 60 அடி உயர கழுமரம் ஏறும் போட்டி



திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ராமநாதபுரத்தில் ஸ்ரீ மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், பகவதி அம்மன், பாலமுருகன், செல்வ விநாயகர் கோவில்களின் உற்சவ விழா 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக நடந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வருடாபிஷேகம் மற்றும் மூல விக்கிரகங்களுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து சாமிகளுக்கு கரகம் பாலிக்கப்பட்டு, சாமி வீதி உலா நடந்தது.

அதைத்தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை அம்மன்கள் குடி புகுதல் நிகழ்ச்சியும் சிறப்பு பிரார்த்தனைகளும் நடந்தன. அதன் பின்னர் ஊர் மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

இன்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ஊர் மக்கள் ஒருவருக்கொருவர் வர்ணப் பொடிகளை தூவி, மஞ்சள் நீர் தெளித்து விளையாடினர். அதன் பின்னர் முத்தாலம்மனுக்கு பந்தய மரம் ஏறுதல் என்ற கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு கோவிலுக்கு முன்பாக 60 அடி உயர கழுகு மரம் நடப்பட்டது. இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு கழுமரத்தில் ஏறினர். ஆனால் முழுவதுமாக ஏற முடியாமல் பாதியிலேயே கீழே இறங்கினர்.

அதில் தங்கச்சியம்மாபட்டியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற வாலிபர் கழுமரத்தின் உச்சி வரை ஏறி, அங்கு கட்டியிருந்த நவதானியங்கள், தேங்காய், வாழைப்பழம் அடங்கிய காணிக்கை பையை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினார்.

அவரை பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்று, தோள் மேல் தூக்கி அவரை ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அதன்பின்னர் அவருக்கு ஊர் மக்கள் சார்பாக சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும் பந்தய மரத்தில் ஏறியதற்கு வெற்றி பரிசாக 5000 ரூபாய் வழங்கப்பட்டது.

இந்த திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad