சொந்த வாகனங்களை வாடகைக்கு ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் எச்சரிக்கை
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பஸ் நிலையம் மற்றும் ஆத்துமேடு ஆகிய பகுதிகளில் டூரிஸ்ட் வேன் கார் ஓட்டுநர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வேடசந்தூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சண்முக ஆனந்திடம் புகார் மனு அளித்தனர். அதில் நாங்கள் கார் வேன் ஆகியவற்றை வாடகைக்கு ஓட்டுவதை மட்டுமே தொழிலாக செய்து வருகிறோம். தற்பொழுது எங்களுக்கு வாடகை கிடைப்பதில்லை. சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள் அரசுக்கு வரி செலுத்தாமலேயே வாடகைக்கு ஓட்டுகின்றனர். இதனால் எங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. அதனால் சொந்த எண் கொண்ட வாகனங்கள் வாடகைக்கு ஓட்டுவதை நடவடிக்கை எடுத்து தடுத்த நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர். இதனை அடுத்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர் இது குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் தெரிவித்தார். மேலும் பஸ் நிலையம் தந்தை பெரியார் டூரிஸ்ட் வேன் கார் ஓட்டுநர்கள் சங்க தலைவர் அன்வர்அலி கூறும் பொழுது இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் அனைவரும் வாடகை கார் என்பதை மாற்றி சொந்தக்காரராக வைத்துக் கொண்டு நாங்களும் வாடகைக்கு ஓட்டுவோம். அப்பொழுது அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரி வருவாய் பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக வேடசந்தூர் செய்தியாளர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment