கொடைக்கானல் புலியூர் பகுதியில் குட்டிகளுடன் காட்டு யானைகள் வலம் வருவதால் மலைக்கிராம மக்கள் பீதி.
திண்டுக்கல் மாவட்டம் பழனி வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், கொடைக்கானல், வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட புலியூர் கிராமத்துக்கு படையெடுத்துள்ளன.
தற்போது இந்த யானைகள், புலியூர் பகுதியில் உள்ள வருவாய்த்துறை மற்றும் விவசாய நிலங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த 2 நாட்களாக யானைகள் முகாமிட்டு இருப்பதால் விளை நிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். எந்த நேரமும் என்னவாகுமோ என்று பொதுமக்களும் பீதி அடைந்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment