கொடைக்கானலில் தனியார் உணவு விடுதியில் 600 கிேலா பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் டெப்போ பகுதியில் தனியார் உணவு விடுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள் பயன்படுத்துவதாக
புகார் வந்ததையடுத்து, நகராட்சி பொது சுகாதார பிரிவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்தியது தெரியவந்தது. விடுதியின் குடோனில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு பிளாஸ்டிக் ஸ்பூன்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பாலித்தீன் பைகள், மக்காத துணி பைகள் இருந்தன. அதனை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர். உணவு விடுதி குடோனில் இருந்து 600 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து உணவு விடுதியின் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment