கொடைரோடு அருகே டிராக்டர் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைேராடு அருகே மதுரை - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், மெட்டூர் மேம்பாலத்தில் டிராக்டர் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த சரக்கு வேன், டிராக்டர் மீது திடீரென மோதியது. இதில் நிலைதடுமாறி தண்ணீர் டேங்கருடன் டிராக்டர் நடுரோட்டில் கவிழ்ந்தது. மேலும் சரக்கு வேன், சாலையோர தடுப்பு கம்பி மீது மோதி நின்றது. இதில் டிராக்டர் டிரைவர் முருகேசன், சரக்கு வேன் டிரைவர் ராஜாராம் இருவரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment