திண்டுக்கல்லில் மூதாட்டிக்கு கத்தி குத்து.
திண்டுக்கல் R.M.காலனி 2-வது பிரதான சாலை பகுதியில் மாரியம்மாள்(65) என்ற மூதாட்டியை, மர்ம நபர் கத்தியால் கழுத்து, தலை உள்ளிட்ட 3 இடங்களில் சரமாரியாக குத்திவிட்டு தப்பிவிட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேற்கு போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாரியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment