திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடரும் செல்போன் திருட்டு... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 9 July 2023

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடரும் செல்போன் திருட்டு...

 


திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடரும் செல்போன் திருட்டு.


திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் கடந்த சில நாட்களாகவே நோயாளிகளின் பொருட்கள் அதிக அளவில் திருடுபோயி உள்ளது. மேலும் வெளி ஆட்களின் அட்டகாசத்தால் நோயாளிகள் அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக பைக் சாகத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் குடிபோதையில் ரகளை செய்பவர்கள் தொல்லை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் காவலாளி தாக்கப்பட்டார்.

திண்டுக்கல் அருகே காமலாபுரம் சக்கைய நாயக்கனூரை சேர்ந்த அருள் சகாயராஜ் (23). குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்த இவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அதிகாலையில் இவரது செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். தொடர்ந்து உள்நோயாகளிடம் பணம், செல்போன் திருடப்படுவது தொடர்கதையாகி வருகிறது. எனவே மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad