சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் காகித பேனா தயாரிக்கும் இளைஞர்.
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்த சிவபாலன்-25. இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்துள்ளார். இவர் சுயதொழில் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார். இதையடுத்து மாவட்ட தொழில் மையம் உதவியுடன் கடன் பெற்று, முறைப்படி காகிதப் பேனா தயாரிக்கும் தொழிலை தொடங்கினார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பேப்பர் பேனா தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். இது 98 சதவீதம் பிளாஸ்டிக் இல்லாதது. இந்த பேப்பர் பேனாவை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்தாலும், அது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் மக்கும் தன்மை உள்ளது. பல்வேறு தரப்பினரும் இளைஞரை பாராட்டி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment