கொடைக்கானலில் அடித்துச் செல்லப்பட்ட ஆற்றுப் பாலம் நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள்- பொதுமக்கள் அச்சம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வில்பட்டி ஊராட்சியில் உள்ள பள்ளங்கி வழியாக கோம்பைக்கு செல்லும் பாதை நேற்று முன்தினம் பெய்த கன மழையில் ஆற்றில் போடப்பட்ட பாலம் அடித்து செல்லப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குச் செல்லவில்லை. ஒரு சிலர் ஆபத்தை உணராமல் ஆற்றை கடந்து செல்கின்றனர். இப்பகுதி பொதுமக்கள் கொடைக்கானல் அரசு அதிகாரிகள் அனைவருக்கும் தகவல் அளித்தும், இன்று வரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாற்று ஏற்பாடும் செய்யவில்லை. ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்தால் ஆற்றை கடந்து செல்ல முடியாது. 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். ஆகவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment