திண்டுக்கல்லில் திருமா பயிலகம் திறப்பு விழா நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக திருமா பயிலகம் எனும் பெயரில் குரூப் 2, குரூப் 4 மற்றும் காவல்துறை எஸ்.ஐ. போட்டித் தேர்வுக்கான கட்டணமில்லா கல்வியகம் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் நாகல்நகர், சந்தை ரோட்டில் அமைந்துள்ள திருமா பயிலகம் துவக்க விழா நடைபெற்றது. இதற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ரோக்கஸ் வளவன் தலைமை தாங்கினார். பங்குதந்தை தாமஸ் ஜான்பீட்டர், பேராசிரியர் தேவசகாயம், மாமன்ற உறுப்பினர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துனைச் செயலாளர் அன்பரசு வரவேற்றார். மாநில செய்தி தொடர்பாளர் பாவலன், திருமா பயிலகம் இயக்குநர் பானுதுறை, பௌத்த செயற்பாட்டாளர் ஜெனிபர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் கட்சியின் பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக பிரேம்ராஜா நன்றி கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment