தென்னை மரத்தில் காண்டாமிருக வண்டுகளை அழிக்கும் முறை... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 11 July 2023

தென்னை மரத்தில் காண்டாமிருக வண்டுகளை அழிக்கும் முறை...


 தென்னை மரத்தில் காண்டாமிருக வண்டுகளை அழிக்கும் முறை.


திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, 

ரெட்டியார்சத்திரம் வட்டாரம் அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரமோகன் அறிவுரையின் படி,

தென்னை மரத்தை தாக்கும் காண்ட மிருக வண்டுகளை கட்டுப்படுத்தும் முறையைப் பற்றி செயல் விளக்கத்துடன் விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.


தாக்குதல் அறிகுறிகள்


இவ்வண்டுகள் தென்னையின் உச்சியில் விரிவடையாத குருத்துப்பாகத்தில் துளையிட்டு, மரத்தின் உள்ளே சென்று வளரும் மொட்டுப்பகுதியை மென்று விடுகிறது.

தாக்கப்பட்ட பாகம் போக எஞ்சிய குருத்து விரியும்போது, தென்னை மட்டை முக்கோண வடிவில், சீராக கத்தரியால் வெட்டியதுபோல் தோற்றமளிக்கும்.

இவ்வண்டு தாக்குவதால் 10-15% மகசூல் குறையும்.

மொட்டுப்பகுதியை மென்றபின் மீதியாகும் மரச்சக்கையை உள்ளே சென்ற துவாரம் மூலம் அடிமட்டையின் இடுக்குகளிலிருந்து வெளியே தள்ளுகிறது. 


மேலாண்மை உழவியல் முறைகள் 


தாக்கப்பட்ட மடிந்துபோன மரங்களை தோப்பிலிருந்து அகற்றி அழித்து விட வேண்டும். தோப்பை சுத்தமாக வைக்க வேண்டும்.

கம்போஸ்ட் மற்றும் உரக்குழிகளில் இருந்து காண்டாமிருக வண்டின் முட்டைகள், புழுக்கள், கூட்டுப்புழுக்களை பொறுக்கி அழிக்கவும்.

எருகுப்பையில் வேவேரியா பேஸியான, மெட்டாரைசியம் என்ற பூ கொல்லி உயிரியல் கட்டுப்பாட்டு மருந்தை எரு குப்பியில் கலக்கும்போது புழுக்கள், வண்டுகள் இறந்து விடுகின்றன.


இயந்திர முறை


வண்டின் தாக்குதல் அதிகரிக்கும் போது, மரத்தின் குறுத்துப் பாகத்தில் வளர்ந்த வண்டு உள்ளதா என்று பார்த்து,  இருந்தால் கம்பி அல்லது  சுளுக்கியால் அதைக் குத்தி வெளியில் எடுத்துக் கொன்று விட வேண்டும்.

கோடை மற்றும் மழைக்காலங்களில் அந்தி நேரங்களில் விளக்கு பொறிகளை தோப்புக்குள் வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.


பொறி அமைத்தல்

 

பிடிபட்ட காண்டாமிருக வண்டுகளை, 

ரினோலியூர் எனும் இனக்கவர்ச்சிப் பொறியினை ஹெக்டருக்கு 5 என்ற வீதத்தில் வைக்கலாம். ஒரு பிளாஸ்டிக் வாளியில் 1.5 மி.லி என்டோஃசல்பான் 35 + 2 லி நார் சேர்த்த பூச்சிக் கொல்லிக் கலலையை ரினோலியூருடன் கலந்து தோப்பினில் தொங்கவிட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை இவ்வாளியினைக் கவனித்து கவரப்பட்டு இறந்து கிடக்கும் வண்டுகளை அழிக்க வேண்டும்.


உயிரியல் முறை


மழைக் காலங்களில் முதல் மழையினைத் தொடர்ந்து விளக்கும் பொறிகளை அமைப்பதன் மூலம் வளர்ந்த வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

மெட்டாரைசியம் அனிசோபிலே பச்சைமஸ்கார்டைன் பூஞ்சையினை ஒரு மீற்கு 510 ஸ்போர்கள் என்ற அளவில் 250 மில்லி மெட்டாரைசியம் + 750 மில்லி நீர் சேர்த்து எருக்குழியில் தெளிப்பதனால் வண்டுகளின் இளம்புழுக்களை அழிக்கலாம்.

ஒரு மண்பானையில் 5 லி நீருடன் 1 கி.கி அமணக்கு புண்ணாக்கு சேர்த்த கலவையை தோப்பினில் வைத்தும் கவரலாம்.

வேப்பங்கொட்டைத் துாளையும், மணலையும் 1.2 என்ற விகிதத்தில் கலந்து, மரம் ஒன்றிற்கு 150 கி வீதம் நடுக்குருத்தின் 3 மட்டை இடுக்குகளில் வைக்கலாம்.

மேலே சொன்ன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் காண்டாமிருக வண்டின்னை கட்டுப்படுத்தலாம்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad