பழனி முருகன் கோயிலில் பள்ளியறை சன்னதியில் ரூ.35 லட்சத்தில் வெள்ளித்தகடு பொருத்தும் பணி தீவிரம்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் மூலவர் சன்னதிக்கு செல்லும் வழியில் உட்பிரகாரத்தில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கு உற்சவர் மண்டபம், நடராஜர், சின்னக்குமார சுவாமிக்கு என தனித்தனி மண்டபம் உள்ளது. இதில், பள்ளியறை மண்டபம் முழுவதும் நன்கொடையாளர் மூலம் ரூ.35 லட்சம் செலவில் வெள்ளி முலாம் பூசிய தகடு பொருத்த கோயில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் அற்புத வேலைப்பாடுகளுடன் மொத்தம் 54 கிலோ வெள்ளியாலான தகடு பொருத்தும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment