பழனி முருகனுக்கு, வைரக்கல் பதித்த தங்கவேல்: பக்தர் வழங்கினார். - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 24 July 2023

பழனி முருகனுக்கு, வைரக்கல் பதித்த தங்கவேல்: பக்தர் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலில், பக்தர் ஒருவர் முருகப்பெருமானுக்கு வைரக்கல் பதித்த தங்க வேலை காணிக்கையாக வழங்கினார், கோவையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், பழனி முருகன் கோவில் முருகப்பெருமானுக்கு வைரக்கல் பதித்த தங்க வேலை கோவிலில் காணிக்கையாக வழங்கினார்.

 

இந்த தங்க வேல் சுமார் 1.09 கிலோ எடை கொண்டது. அதை பெற்று கொண்ட கோவில் நிர்வாகத்தினர், மலைக்கோவில் உட்பிரகாரத்தில் உள்ள சண்முகர்-வள்ளி தெய்வானைக்கு முன்பு வைத்து சிறப்பு பூஜை செய்தனர். உச்சிகால பூஜையில் மூலவர் சிலையின் அருகில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.


ஆறுபடை வீடுகளில், மிகவும் பிரசித்தி பெற்ற  பழனி மலை இக்கோவிலுக்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து காணிக்கை செலுத்துவது வழக்கமாக உள்ளது. மேலும், பங்குனி உத்திரம், தைப்பூசம், ஆடி கார்த்திகை, வைகாசி விசாகம், ஆகிய நாட்களில் பக்தர்கள் பாதயாத்திரை வந்து பழனி முருகனை தரிசித்து விட்டு, தங்களால் என்ற காணிக்கை செலுத்துவது வழக்கமாக உள்ளது. செல்வந்தர்கள் தங்கள் நேர்த்தி கடனாக, முருகனுக்கு வேல், வெள்ளி வேல், தங்கவேல் மற்றும் நாணயங்கள் ஆகியவையை காணிக்கையாக செலுத்துவது வழக்கமாக உள்ளது. 


இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவிலில் காணிக்கையாக செலுத்து பக்தர்களுக்கு, கோவில் அலுவலகத்தின் சார்பாக ரசீது வழங்கப்படுகிறது. இத்திருக்கோவிலில், இணை ஆணையர் அந்தஸில் நிர்வாக அதிகாரி செயல்படுகிறார். மேலும், பக்தர்கள் வசதிக்காக இத்திருக்கோவிலில், பல்வேறு வசதிகள் செய்து தரப்படுகிறது. 

No comments:

Post a Comment

Post Top Ad