வேடசந்தூர்:ஆத்து மேட்டில் இருசக்கர வாகனத்தை திருடி நபர் கைது :
திண்டுக்கல் வேடசந்தூர் ஆத்துமேட்டு பகுதியில் உள்ள ஒரு டீ கடைக்கு டீ குடிக்க வந்துள்ளார் மருதமுத்து இவர் தமுக்கத்து பட்டியைச் சேர்ந்தவர் டீக்கடைக்கு முன்பு தனது இரு சக்கர வாகனத்தை சாவியை எடுக்காமல் நிறுத்திவிட்டு சென்றுள்ளார் மீண்டும் வந்து பார்த்தபோது தன்னுடைய பைக் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த மருதமுத்து டீக்கடையில் பொருத்தப்பட்டுள்ள கேமராவை பார்த்துள்ளார் அப்போது காக்கி உடை அணிந்த ஒரு நபர் தன்னுடைய பைக்கை திருடி செல்வது பதிவாகி இருப்பதைக் கண்டு வேடசந்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார் சிறிது நேரம் கழித்து சிசிடிவியில் தென்பட்ட அதே நபர் ஒன்றும் தெரியாதது போல் அப்பகுதியில் நடந்து வந்துள்ளார் அப்பகுதி மக்களின் உதவியுடன் பைக்கை திருடியநபரைப் பிடித்த மருதமுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தார் விசாரணையில் பைக்கை திருடியவர் நத்தம் அருகே கோபால்பட்டியை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பதும் பைக்கை திருடிவிட்டு மீண்டும் அப்பகுதிக்கு ஒன்றும் தெரியாது போல் வந்து மாட்டிக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.
தமிழக குரல்செய்தியாளர் வேடசந்தூர் கார்த்திகேயன்.
No comments:
Post a Comment