குஜிலியம்பாறை அருகே பணம் வைத்து சூதாடிய 23 பேர் கைது, 12 டூவீலர்கள், ரூ.21 ஆயிரம் பணம் பறிமுதல் - மாவட்ட எஸ்பி அதிரடி நடவடிக்கை
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேடசந்தூர் டிஎஸ்பி துர்கா தேவி தலைமையிலான போலீசார் குஜிலியம்பாறை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது குஜிலியம்பாறை அருகே காளப்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடிய ஞானசேகரன், கர்ணன், பாஸ்கரன் உள்ளிட்ட 23 பேரை கைது செய்து மேலும் அவர்களிடமிருந்து 12 டூவீலர்கள், ரூ.21 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து குஜிலியம்பாறை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தமிழக குரல் செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள பிரிவு
No comments:
Post a Comment