பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவர் கைது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு வாய்க்கால்கரை பகுதியில் நடைபெற்ற மதுரைவீரன் கோவில் திருவிழாவின் போது ஊர்வலம் நடைபெற்றது. அப்பொழுது இடையூறாக டாட்டா ஏஸ் வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த முதல்நிலை காவலர் பாலமுருகன் அப்புறப்படுத்த கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ஐந்து பேர் அவர் மீது பட்டாசை கொளுத்தி போட்டும், அவரை தாக்கியும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து குமரேசன், காட்டுப்பூச்சி என்ற மாரிமுத்து, வெள்ளைச்சாமி ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் தலைமறைவாக இருந்த வடிவேல் மற்றும் ராஜபாண்டி ஆகியோரை தேடி வந்தனர். இந்நிலையில் ஆத்துமேடு பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த வடிவேலை வேடசந்தூர் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து வழக்கு பதிந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருக்கும் ராஜபாண்டியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக வேடசந்தூர் செய்தியாளர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment