திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் அனைவரும் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். கோர்ட்டுக்கு வரும் வழக்காடிகளுக்கும், வக்கீல்களுக்கும், விசாரணை கைதிகளுக்கும் போதுமான குடிநீர் வசதியோ, கழிப்பறை வசதியோ, வாகனங்கள் நிறுத்தும் வசதியோ செய்து தரப்படவில்லை என்றும், கோர்ட்டு வளாகமே முச்சடிகளாலும் புதர்களாலும் மண்டி கிடப்பதை தூய்மைப்படுத்தவில்லை என்றும், நீதிமன்றத்தில் உள்ள ஒரு சில காலி பணியிடங்களையும் முழுவதுமாக நிரப்பி வழக்குகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சிக்கு வக்கீல் சங்க தலைவர் ஏ.முருகேசன் தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். வக்கீல்கள் கிருஷ்ணன், தங்கவேல்முனியப்பன், சரவணகுமார், சுகுமார், சீனிவாசபெருமாள், நாகராஜ், காமராஜ், அரபுஅலி, பகத்சிங், அபிமன்யு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக வேடசந்தூர் செய்தியாளர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment