நடந்து சென்று கொண்டிருந்த வட மாநில தொழிலாளி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சிகிச்சை பலனின்றி பலி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கிரியம்பட்டியில் நூற்பாலையில் விடுதியில் தங்கி இருக்கும் ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் குடிசை என்னும் கிராமத்தைச் சேர்ந்த லபோ தளபதி வயது 25 நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரவீன் குமார் வயது 30 என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் லபோ தளபதி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். சம்பவம் குறித்து வேடசந்தூர் சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்தவரின் உடலை நூற்பாலை நிர்வாகம் தங்களது செலவில் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி வைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக வேடசந்தூர் செய்தியாளர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment