பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியங்களில் சார்பாக மக்கள் நலனுக்கு எதிராகவும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராகவும் திமுக அரசு செயல்படுவதாக கூறி பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு ஒன்றியத்தின் சார்பாக ஆத்து மேட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வர்த்தகப்பிரிவு மாவட்ட தலைவர் மருதுபாண்டி தலைமை வகித்தார். இதில் மேற்கோன்றிய தலைவர் கோபால் மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் பாலாஜி மாவட்ட செயலாளர் மாவீரன் ஒன்றிய பொதுச் செயலாளர் மகேந்திரன் மற்றும் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கிழக்கு ஒன்றியத்தின் சார்பாக தண்ணீர் பந்தம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய துணைத் தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். சக்தி கேந்திர இணை பொறுப்பாளர் ரமேஷ் குமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் முத்துசாமி வரவேற்பு உரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் சுரேஷ் குமார். ஒன்றிய தலைவர் செந்தில்குமார். ஒன்றிய பொதுச் செயலாளர் சுரேஷ்குமார் பாலமுருகன் ஆன்மீக பிரிவு ஒன்றிய தலைவர் ஜெயன் ஒன்றிய செயலாளர் ரஞ்சித் கிளை தலைவர்கள் பூபதி பாலகிருஷ்ணன் சண்முகம் லோகேஷ் குமார் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment