திண்டுக்கல்லில் கடன் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர்களிடமிருந்து பணத்தை மீட்டு எஸ்பி உரியவரிடம் ஒப்படைத்தார்.
திண்டுக்கல் A.வெள்ளோடு பகுதியை சேர்ந்த ஜெயந்தி மற்றும் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கண்ணன் ஆகியோரிடம் மர்ம நபர்கள் டாட்டா கேப்பிட்டல் கம்பெனியில் இருந்து கடன் தருவதாக கூறி இருவரிடம் சேர்த்து ரூ.1,08,406 பெற்றுக் கொண்டு ஏமாற்றி மோசடி செய்ததாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து காவல்துறையினரின் துரித நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உரியவர்களிடம் பணத்தை ஒப்படைத்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment